Categories
டென்னிஸ் விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: திட்டமிட்டபடி நடக்குமா …? என்று தெளிவுபடுத்த வேண்டும் -ரோஜா் பெடரர்…!!!

ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்று, போட்டியின் அமைப்பாளர்கள்தான் விளக்கம் அளிக்க வேண்டுமென்று , முன்னாள்  டென்னிஸ் வீரரான பெடரர் தெரிவித்துள்ளார்.

20 கிராண்ட்ஸ்லாம்  பட்டத்தை வென்ற சாதனையாளரான ரோஜா் பெடரர், கால்முட்டியில் ஏற்பட்ட காயத்தால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அறுவை சிகிச்சைக்குப் பின் இவர் போட்டிகளில், பங்கு பெற்று விளையாடாமல் இருந்தால். இந்த நிலையில் இன்று நடைபெற உள்ள ஜெனீவா ஓபன் டென்னிஸ் போட்டியில், பங்கேற்க உள்ள பெடரர்,  இதன்பிறகு பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்துகொண்ட திட்டமிட்டிருக்கிறார். கடந்த ஆண்டு கொரோனா தொற்றால்  தள்ளிவைக்கப்பட்ட, டோக்கியோ ஒலிம்பிக் போட்டி இந்த ஆண்டு வருகின்ற ஜூலை 23ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஆனால் தற்போது உலக நாடுகள் முழுவதும், கொரோனா வைரஸ் பரவல் வேகமாக பரவி வருவதால் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் ,  ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு சுவிட்சர்லாந்து நாட்டுக்காக  பதக்கம் வெல்வதே ,என்னுடைய விருப்பம் ஆகும். ஆனால் தற்போது உள்ள சூழலில் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா,என்று போட்டி அமைப்பாளர்கள் தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டும். எனவே இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறுவது பற்றி தெளிவான முடிவு எடுக்கவில்லை என்றும், இரண்டு விதமான மன நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்

Categories

Tech |