Categories
தேசிய செய்திகள்

அதிசயம் ஆனால் உண்மை…. இவையெல்லாம் அரசு செய்யத் தவறியவை…. ப. சிதம்பரம் குற்றச்சாட்டு….!!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம்.

அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் உறவினர்களின் கதறல் நாளுக்கு நாள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இருக்கும் தடுப்பூசிகளும், புதிதாக கண்டறியப்பட்ட தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் அரசு செய்யத் தவறியவற்றை ப.சிதம்பரம் வரிசையாக கூறிய குற்றம் சாட்டியுள்ளார். அதிசயம் ஆனால் உண்மை. நான்கு கட்டமாக 102 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு எவ்வளவு தடுப்பு ஊசி தேவைப்படும் என்று எளிய கணிக்க மத்திய அரசு போட தவறியது. இரண்டு கம்பெனிகள் ஒரு மாதத்தில் எவ்வளவு தயாரிக்க முடியும் என கணிக்க தவறியது. தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்க தவறியது. ஸ்புட்னிக் தவிர எந்த தடுப்பூசியும் அனுமதி தரவில்லை என காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் வரிசையாக குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |