தனது திருமணத்திற்கு மேளம் வாசிக்க யாரும் வராத காரணத்தினால் மணமகனே மேளம் வாசித்து திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொடரின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமில்லாமல் திருமணம் மற்றும் இறப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் காரணமாக திருமணங்களில் குறைந்த அளவு மக்களை கலந்து கொள்கின்றன.
https://twitter.com/rupin1992/status/1392295464293203969
இந்நிலையில் ஒரு திருமண விழாவில் மேளம் வாசிக்க யாரும் வராத காரணத்தினால் மணமகனே மேளம் வாசித்து ஆடிப்பாடி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனை அங்கு சுற்றியுள்ளவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவை ஐஎஸ் அதிகாரியான ரூபன் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.