Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி …. முதியவர் பலியான சோகம் … விசாரணையில் போலீஸ் …!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் வாகனம் மோதி, ஏற்பட்ட விபத்தில் முதியவர் ஒருவர், பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் சோழவரம் ஒன்றியம் பகுதியில், சின்னம்பேடு ஊராட்சியை சேர்ந்த அகரம் கூட்டு சாலையில் ,அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, கடந்த மாதம் 21 ஆம் தேதி        60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மீது மோதியுள்ளது. அடிப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஆரணி பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டரான  தரணேஸ்வரி மற்றும் அவர் தலைமையிலான போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் .

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முதியவரை, சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு, போலீசார் எடுத்துச் சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். எனவே இதுகுறித்து உயிரிழந்தவர் யார் ? விபத்து ஏற்படுத்திய வாகனம் யாருடையது ? என்பது குறித்து  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |