பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 140 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் வேப்பந்தட்டை வட்டாரத்தில் 24 பேரும், பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 92 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 15 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 9 பேரும் என மொத்தம் 140 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,225 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு 1,194 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவிலிருந்து 2,996 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று மருத்துவ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.