Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. கொரோனாவின் 2 ஆவது அலை பரவல்….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 977 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பெருக்கெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவது மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் பொதுமக்களை வெளியே செல்லும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், முக கவசத்தை அணியவும் வலியுறுத்தியது.

இந்நிலையில் ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 977 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்படைந்தவர்கள் சிகிச்சைக்காக தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |