இங்கிலாந்தில் குழந்தையுடன் தனியாக சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் ஒருவர் குழந்தையை பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் மாநிலத்தில் இருக்கும் Dudley என்ற நகரின் சாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பெண் ஒருவர் தன் குழந்தையுடன் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று ஒரு மர்ம நபர் அவரை தடுத்து குழந்தையை விலைக்கு தருமாறு கேட்டுள்ளார்.
அதன் பின்பு குழந்தையை தூக்கவும் முயன்றுள்ளார். இதனால் பதறிய அந்த பெண் அந்த நபரை உடனடியாக தள்ளிவிட்டு குழந்தையுடன் அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார். இதுகுறித்து காவல் துறையினரிடம் அந்த பெண் புகார் தெரிவித்துள்ளார்.
எனவே காவல்துறையினர், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர். மேலும் இது போன்ற சம்பவம் வேறு பகுதியிலும் நடந்துள்ளதா? என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் காவல்துறையினர் சோதனை பணியில் ஈடுபட்டுள்ளனர்.