Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நிறைய தப்பு பண்ணிருக்காங்க..! இது தான் ஒரே வழி… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் இளம்பெண் கொலை வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 2 பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் இளம்பெண் வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட கிளாங்காட்டூரை சேர்ந்த காட்டுராஜா ( 26 ), நெடுங்குளத்தை சேர்ந்த தனசேகர் ( 26 ) ஆகிய இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மேலும் இவர்கள் இருவர் மீதும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்து வந்துள்ளது.

எனவே சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |