தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து நேற்று முதல் முழு ஊரடங்கு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து இன்று காலை 6 மணி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. அதன்படி மே-17 ஆம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் தேவையில்லை. ஆனால் eregister.tnega.org என்ற இணையதளத்தில் பதிவு செய்தால் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.