பிக் பாஸ் பிரபலம் மதத்தின் மனைவிக்கு வளைகாப்பு நடந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்தின் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா திரை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் மகத். இதை தொடர்ந்து ஜில்லா, வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார். இதை தொடர்ந்து நடிகர் மகத் பிராச்சி மிஸ்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் நடிகர் மகத்தின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். ஆகையால் தனது மனைவிக்கு நடிகர் மகத் வளைகாப்பு செய்துள்ளார். மேலும் அவர் தனது மனைவிக்கு மஞ்சள் பூசி, முத்தமிட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்க்கும் திரை பிரபலங்களும், ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
https://www.instagram.com/reel/COzUAqKj4Gy/?igshid=170grvw9cqkxa