Categories
உலக செய்திகள்

பிரிட்டன் சுற்றுலா பயணிகளுக்கு கதவை திறந்துவிட்ட நாடு.. குழப்பத்திற்கு கிடைத்த தீர்வு..!!

போர்ச்சுகல், பிரிட்டன் சுற்றுலா பயணிகளை தங்கள் நாட்டிற்குள் பயணிக்க அனுமதி வழங்கியுள்ளது.  

போர்ச்சுக்கல் நாட்டின் எம்.பி Algarve, வரும் மே 17ஆம் தேதியிலிருந்து பிரிட்டன் சுற்றுலா பயணிகள் தங்கள் நாட்டிற்குள் வருவதற்கு அனுமதி அளிக்கப்படுமா? என்பது எனக்கு தெரியாது என்று கூறியதால், குழப்பம் உருவானது. இந்நிலையில் போர்ச்சுக்கல், வரும் மே 17ஆம் தேதியிலிருந்து சுற்றுலா பயணிகள் தங்கள் நாட்டிற்குள் பயணிக்க அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் போர்ச்சுக்கல் தேசிய சுற்றுலா அலுவலகம் தெரிவித்துள்ளதாவது, தங்கள் நாட்டிற்கு பயணம் செய்ய விரும்பும் அனைவரும் புறப்படுவதற்கு மூன்று தினங்களுக்கு முன்பாக கொரனோ பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது.  மேலும் பிரிட்டன் மக்கள் தங்கள் நாட்டிற்குள் வருகை புரிந்து எங்களது மரபுகள், கலாச்சாரங்கள், அடையாளங்கள் மற்றும் வரலாற்று சிறப்புகள் போன்றவற்றை கொண்டாடியிருக்கிறார்கள்.

எனவே பிரிட்டன் சுற்றுலா பயணிகளை எங்களது நாட்டிற்குள் வரவேற்பதை விரும்புகிறோம்  என்று போர்ச்சுக்கல் வெளியுறவுத்துறை அமைச்சரான Augusto Santos Silva தெரிவித்திருக்கிறார்

Categories

Tech |