Categories
உலக செய்திகள்

இஸ்ரேல்-காசா பகுதி மோதல்.. போர் உருவாகும் அபாயம்.. பதற்றத்தில் மக்கள்..!!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையேயான மோதல் அதிகரித்து வருவதால் போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

இஸ்ரேல் நாட்டிற்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் வெடித்து வருகிறது. இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் காசா முனையில் ஹமாஸ் போராளிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதும், அவர்கள் இஸ்ரேல் மீது ராக்கெட் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளரான ஜோனத்தான் கான்ரிகஸ், தற்போது வரை காசா முனை பகுதியிலிருந்து சுமார் 1600 ராக்கெட் தாக்குதல்களை இஸ்ரேல் மீது நடத்தப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். இதனிடையே காசா முனை பகுதி போர்க்களமாக மாறிவிட்டதாகவும், பல்வேறு கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளதாகவும், இஸ்ரேலிய படையின் அதிகமான வாகனங்கள் சேதமடைந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நோக்கி தொடர்ந்து வீசிய ராக்கெட்டுகளில் அதிகமானவை நடுவானத்திலேயே தடுத்து அழிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டு வருவதால் போர் ஏற்படும் ஆபத்து இருப்பதாக அப்பகுதி மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.

Categories

Tech |