Categories
விளையாட்டு

கொரோனா தொற்றால் உயிரிழந்த….முன்னாள் ஹாக்கி வீரர்களின் குடும்பத்திற்கு….தலா ரூ 5 லட்சம் நிதியுதவி….!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த, முன்னாள் ஹாக்கி வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும், என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

கடந்த 1980 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் பங்குபெற்ற  ரவீந்தர் பால்சிங், எம்.கே.கவுசிக் இருவரும் சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்தனர். இந்நிலையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சராக கிரண் ரிஜிஜு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தொற்றால் பாதிக்கப்பட்ட உயிரிழந்த முன்னாள்  ஹாக்கி வீரர்களின் குடும்பத்திற்கு ரூ  5 லட்சம் நிதி உதவியாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த அவர் , இந்திய ஹாக்கி அணியில் சிறந்து விளங்கிய வீரர்கள் ரவீந்தர் பால்சிங் மற்றும் கவுசிக் இருவரையும் நாம் இழந்துள்ளோம். அவர்கள் இந்திய ஹாக்கி அணிக்காக அளித்த பங்களிப்பு , எப்போதும் நினைவில் கொள்ளப்படும், என்றும் அவர்களின் குடும்பத்திற்கு நாம் உறுதுணையாக நிற்போம், என்றும் தெரிவித்திருந்தார்.

Categories

Tech |