பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட நிதி திரட்டி வருகிறார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.
இதில் பல திரை பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பல திரைப்பிரபலங்கள் தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதி திரட்டி வருகிறார்.
இதன் மூலம் கிடைக்கும் நிதியை அவர் ஆக்சிஜன் மற்றும் உயிர் காக்கும் உபகரணங்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர், பொதுமக்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய முன்வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.