Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு…? மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வலியுறுத்தல்..!!

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட வேண்டுமென இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கை வசதி, தடுப்பூசி தட்டுப்பாடு போன்ற காரணத்தினால் நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றன.

இவற்றை சரி செய்யவும் மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள எழுதி 18 மாவட்டங்களில் நான்கில் மூன்று பங்கு மாவட்டங்களில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. முக்கியமாக டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் மீண்டும் ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் பல்ராம் பார்கவா மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |