சிகிச்சைகாக மருத்துவமனைகளை அணுக காத்திருப்போர், எந்த மருத்துவமனையில் எவ்வளவு படுக்கை வசதிகள் உள்ளன? அவற்றில் எவவ்ளவு காலியாக இருக்கின்றன என்பதை பற்றி உடனுக்குடன் அறிந்து கொள்ளவும், அந்த மருத்துவமனைகளின் தொடர்பு எண்களை அறியவும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியிருக்கும் இணையதளம் எப்படி உதவுகிறது என்பதை பற்றி காண்போம்.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் எடுத்து பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க இந்தியா முழுவதும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் காலி படுக்கைகளை கண்டறிய பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர் கொள்கின்றனர். பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி இல்லை என கூறி நோயாளிகள் திருப்பி அனுப்பப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
எப்படி பயன்படுத்துவது:
முதலில் உங்கள் செல் போனில் GOOGLE search செய்யவும்
அதனில் “covid bed status” என search செய்யவும்
அதில் வரும் ரிசல்ட்களில் “https://stopcorona.tn.gov.in › beds” என்ற தமிழக அரசின் இணையதளையதிர்க்குள் செல்லவும்
அதில் Bed Status Hospital Wise என்ற தலைப்பின் கீழ், மாவட்டம், மருத்துவமனைகளின் பெயர், கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட படுக்கைகள் எண்ணிக்கை அதில் மொத்தம் எவ்வளவு?, காலி எவ்வளவு? ஆக்சிஜன் வசதியுடனான படுக்கைகள் காலி நிலவரம், ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளின் காலி நிலவரம், ICU படுக்கைகள் நிலவரம், வெண்டிலேடர்களின் நிலவரம் என எண்ணிக்கைகள் கொடுக்க பட்டிருக்கும்
மேலே உள்ள search boxஇல் உங்கள் மாவட்டத்தை உள்ளீடு செய்தால், உங்கள் மாவட்டத்த்தில் கொரோனா சிகிச்சை வழங்கும் மருத்துவமனைகளின் பட்டியல் வரும்.அவற்றில் நீங்கள் அறிய நினைக்கும் படுக்கை நிலவரங்களை பார்த்து அறிந்திடலாம்.