Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்காக…. சென்னையில் புதிதாக 250 ஆம்புலன்ஸ்கள்….!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஏராளம். அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா குறைந்தபாடில்லை.

எனவே கடந்த மே 10ஆம் தேதி முதல் வருகின்ற 24ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனை மீறி செயல்படும் மக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளது. அதனால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களை அவர்களின் இருப்பிடங்களில் இருந்து முதற்கட்ட உடற் பரிசோதனை மையங்களுக்கு அழைத்துச்செல்ல 250 ஆம்புலன்ஸ் வாகனங்களை ரிப்பன் மாளிகை வளாகத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு துவங்கி வைத்துள்ளார்.

Categories

Tech |