Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இவர்களைப் பிடித்து அடிக்க வேண்டும்…. 90ஸ் களின் பேவரெட் சக்திமான் ஆத்திரம்….!!!

‘சக்திமான்’ முகேஷ் கண்ணா வதந்திகளை பரப்புவோரை பிடித்து அடிக்க வேண்டும் என்று கோபத்துடன் கூறியுள்ளார்.

கடந்த 1997ஆம் ஆண்டு முதல் 2005 வரை தூர்தர்ஷன் என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சக்திமான் தொடர் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இத்தொடரை பிரபல நடிகர் முகேஷ் கண்ணா தயாரித்தும், நடித்தும் வந்தார். இந்நிலையில் நடிகர் முகேஷ் கண்ணன் கொரோனாவால் உயிரிழந்துவிட்டார் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வந்தது. இச்செய்தி பாலிவுட் திரையுலகில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் முகேஷ் கண்ணா இச்செய்தியை அறிந்தவுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு சமூக வலைதளங்களில் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, நான் உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கிறேன். சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.மேலும் இதுபோன்ற வதந்திகளை பரப்புபவர்களை பிடித்து அடிக்க வேண்டும் என்று கோபத்துடன் கூறியுள்ளார்.

Categories

Tech |