பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ரகுல் பிரீத் சிங். இவர் தற்போது பிரபல பாலிவுட் இயக்குனர் ரோனி ஸ்க்ரூவாலா தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். காமெடி கலந்த சமூக கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாகும் இப்படத்தை மராத்தி இயக்குனர் தேஜஸ் தியோஸ்கர் இயக்குகிறார்.
இந்நிலையில் இப்படத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை ரகுல் பிரீத் சிங் இந்தப் படத்தில் காண்டம் பரிசோதனையாளராக நடிக்கிறார். நடிகை ரகுல் பிரீத் சிங்கை இப்படத்திற்கு அணுகுவதற்கு முன் நடிகை அனன்யா பாண்டே மற்றும் சாரா அலிகான் அவர்களை தான் முதலில் அணுகியுள்ளார்.
ஆனால் அவர்கள் இப்படத்தில் நடிக்க மறுத்ததால் அதற்கு அடுத்ததாக நடிக்க ராகுல் ப்ரீத்தி சிங் தேர்வு செய்யப்பட்டார். இவர் இப்படத்திற்கான முழு கதையையும், அதில் தனக்கான காட்சிகளையும் முழுவதுமாக கேட்டுவிட்டு இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தின் படபிடிப்பு கொரோனா ஊரடங்கு தளர்வு பின் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.