Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

4 1/2 டன் ஆக்சிஜன் வந்துருச்சு…. இனிமேல் எந்த பிரச்சனையும் இல்லை…. மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை….!!

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுகாக  4 1/2 டன் ஆக்சிஜன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இதனால் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கின்றது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பு,  மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படுகின்றது.

எனவே தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினசரி 7 முதல் 8 டன் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகின்றது. இதனையடுத்து ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் வெளி மாவட்டங்களில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை பெற்று வருகின்றனர். அந்த வகையில் திருச்சியில், காவல்கிணறு அருகிலுள்ள மகேந்திரகிரி மையத்திலிருந்தும் ஆக்சிஜன் கொண்டு வரப்படுகின்றது. இந்நிலையில் தஞ்சாவூரிலிருந்து கொண்டுவரப்பட்ட  4 1/2 டன் ஆக்சிஜன் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிகிச்சையாளருக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகின்றது.

Categories

Tech |