சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் கொட்டாம்பட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் கருப்பையா என்பவரது வீட்டில் 50 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
அதேபோல் கல்லம்பட்டி பகுதியில் கருப்பன் என்பவரிடமிருந்து 46 மது பாட்டில்களும் வலைவீரன்பட்டி கிராமத்தில் சசிகுமார் என்பவரிடமிருந்து 20 மது பாட்டில்களும் உசிலம்பட்டி பகுதியில் மலைச்சாமி என்பவரிடமிருந்து 56 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.