Categories
மாநில செய்திகள்

முதல் ஆளாக நடிகர் சிவகுமார் குடும்பம்… ரூ.1 கோடி கொரோனா நிதி உதவி…!!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து நடிகர் சிவகுமார் குடும்பம் ஒரு கோடி ரூபாயை கொரோனா நிதிக்காக வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது நிறுவனங்கள், பொதுமக்கள், பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருந்தார்.

இதையடுத்து நடிகர் சிவகுமார், நடிகர் கார்த்திக் மற்றும் சூர்யா ஆகியோர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூபாய் ஒரு கோடி நிதி உதவியை சென்னை தலைமைச் செயலகத்திற்கு சென்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து வழங்கினார்கள். இதற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சிவகுமார் பேசுகையில், தமிழகத்தில் தமிழ் படித்தவருக்கு வேலை கொடுக்க வேண்டும். கலைஞரை 40 வருடங்களாக சந்தித்து இருக்கிறேன், அவரின் அரசியல் வாரிசை சந்தித்ததில் மகிழ்ச்சி என தெரிவித்தார்.

Categories

Tech |