இலங்கைக்கு எதிராக விளையாட உள்ள ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு ஷிகர் தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா இடையே கடும் போட்டி காணப்படுகிறது.
வருகின்ற ஜூன் மாதம் இந்திய அணி இலங்கைக்குச் சென்று 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் இங்கிலாந்திற்கு சென்று டெஸ்ட் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடுவதால், இந்த இலங்கைக்கு எதிரான புதிய தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்கள் பங்கு பெறுவார்கள், என்று பிசிசிஐ அறிவித்தது. இந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் சீனியர் வீரர்களான விராட் கோலி ரோகித் சர்மா போன்ற வீரர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள், என்பதால் இந்த புதிய தொடரில் இந்திய அணியின் கேப்டனாக யாரை நியமிக்கலாம்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி பிசிசிஐ அதிகாரி கூறும்போது, தற்போது நடைபெற்றுள்ள ஐபிஎல் போட்டியில் ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதாகவும், அதோடு அவர் கடந்த 8 ஆண்டுகளாக இந்திய அணியில் தொடர்ந்து விளையாடி உள்ளார் என்று கூறினார்.
எனவே இதன் காரணமாக ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்படுவதற்கு, அதிக வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதேபோல் ஹர்திக் பாண்டியாவும் இந்த தொடரில் இடம் பெறுவதற்கு உள்ளதால் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆனால் சமீபகாலமாக ஹர்திக் பாண்டியா பவுலிங்கில் அதிகம் ஈடுபடாமல் , பேட்டிங்கில் மட்டும் விளையாடி முன்னேற்றம் அடைந்து உள்ளார். இதன் காரணமாக ஒருவேளை ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டால் அவர் நிச்சயமாக சிறப்பாக செயல்படும் வாய்ப்பு உள்ளதாக அவர் கூறியுள்ளார். எனவே ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிகர் தவான் இருவருக்கும் இடையே, கடும் போட்டி நிலவி வருவதால், இந்த தொடரில் கேப்டனாக யாரை நியமிப்பது என்பது பற்றி, பிசிசிஐ ஆலோசித்து வருகிறது .அதோடு கூடிய விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.