Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலம் ஆஜித்திக்கு கொரோனா…. இயல்பு நிலைக்கு திரும்பும் என நம்பிக்கை…!!!

பிக் பாஸ் பிரபலம் ஆஜித்துக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதில் திரை பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஆஜித்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, “எனக்கு கொரோனா குறித்த எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை.

இருப்பினும் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னுடைய உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது. உங்களுடைய பிரார்த்தனைக்கு மிக்க நன்றி. மேலும் அனைவரும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுங்கள். கூடிய விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று நம்புவோம்” என கூறியுள்ளார்.

Categories

Tech |