Categories
தேசிய செய்திகள்

“எனக்கு வந்த கொரோனா என் குடும்பத்துக்கும் வந்துடும்”… துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட தாசில்தார்… அதிர்ச்சி சம்பவம்..!!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தாசில்தார் ஒருவர் தனக்கு கொரோனா பாசிட்டிவ் என்ற அறிக்கை வந்திருந்ததால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு போன்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இதுபோன்ற சூழ்நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற துணை தாசில்தார் ஒருவர் உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் கொரோனா பரிசோதனைக்கு சென்றுள்ளார் .

கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா உறுதி என்று அறிக்கை வந்து இருந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்த அந்த தாசில்தார் தனது வாகனத்தில் இருந்தவாரே தனது துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் இறந்த காரில் ஒரு கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது.  குடும்ப உறுப்பினர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து தான் கவலைப்படுவதாக எழுதியிருந்தார். எனக்கு ஒரு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் அவர்களுக்கும் கொரோனா வந்து விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்ததாக அவர் அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.  இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |