Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

செய்த உதவியை வெளியில் சொல்ல விருப்பமில்லை…. நடிகர் அமிதாப்பச்சன் பதிலடி…!!!

செய்த உதவிகளை வெளியில் சொல்ல விருப்பமில்லை என்று நடிகர் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

தமிழகமெங்கும் தற்போது கொரோனா பரவல் மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதில் திரை பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின் அதிலிருந்து மீண்டார். இதை தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜனை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து கொடுத்தார்.

மேலும் கொரோனா சிகிச்சை மருத்துவ மையத்திற்கு 2 கோடி நிதியுதவி வழங்கி உதவியுள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலர் நடிகர், நடிகைகள் உதவ மனம் இல்லாமல் இருக்கின்றனர் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் அமிதாப்பச்சன் கூறியதாவது, “செய்த உதவிகளை வெளியில் சொல்வதில் எனக்கு விருப்பமில்லை. கொரோனா ஆரம்பித்த காலகட்டத்திலிருந்து முன் களப்பணியாளர்கள், விவசாயிகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் என பலருக்கு நான் ஏராளமான உதவிகளை செய்து இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |