ராணிப்பேட்டையில் மளிகை மற்றும் காய்கறி கடைகள் வழக்கம்போலவே திறக்கப்பட்டது.
தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. அதேபோல் ராணிப்பேட்டையிலும் நாள்தோறும் 400 க்கும் அதிகமான நபர்கள் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு கொரோனாவினுடைய பரவலை தடுக்கும் பொருட்டு முழு ஊரடங்கை அமலுக்குக் கொண்டு வந்தது.
இருப்பினும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய மளிகை, பூ, காய்கறி மற்றும் டாஸ்மாக் கடைகளை காலை 6 மணியளவில் திறந்து மதியம் 12 மணியளவு வரை மட்டுமே செயல்பட அனுமதி அளித்தது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் அமைந்திருக்கும் கடைகள் வழக்கம் போலவே செயல்பட்டது. அதன்பின் 12 மணியளவிற்கு மேலாக அனைத்து கடைகளையும் உரிமையாளர்கள் மூடினர்.