இசையமைப்பாளர் மற்றும் இயக்குனருமான கங்கை அமரனின் மனைவியின் மணிமேகலை கடந்த 10 ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 69. இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜியின் தாயாருமான மணிமேகலை உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும், சிகிச்சை பலனின்றி காலமானார்.
இந்நிலையில் நானும் என் குடும்பமும் எங்கள் குடும்பத்தின் குல தெய்வத்தை இழந்து நிற்கிறோம். முன்னொரு போதும் பார்த்திராத இப்படிப்பட்ட பேரிடர் காலத்தில் ஒரு பேரிழப்பு திக்கித் திணறிக் கொண்டு நிற்கிறோம். இந்த நிலையில் எங்களை அரவணைத்து தேற்றி தோள் கொடுத்து நிற்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தாய் மறைவு குறித்து வெங்கட் பிரபு கண்ணீருடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.