கனடாவை சேர்ந்த தம்பதி, குழந்தையை தத்தெடுக்க இந்தியா வந்த நிலையில், பயண தடையால் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கனடாவிலுள்ள ரொறன்ரோ பகுதியில் வசிக்கும் தம்பதி Hari Gopal Garg மற்றும் Komal Garg. இவர்கள் இந்தியாவில் ஒரு குழந்தையை தத்தெடுக்க கடந்த மார்ச் மாதம் வந்திருக்கிறார்கள். அவர்கள் கனடாவிற்கு திரும்ப இரண்டு நாட்கள் இருந்தபோது இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. இதனால் கனடா செல்லும் விமானத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
மேலும் கனடா அரசு தங்கள் குடிமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால் இத்தம்பதியரை பொருத்தமட்டில் நான்கு வருடமாக குழந்தையை தத்து எடுப்பதற்கு போராடி வந்திருக்கின்றனர். எனவே அவர்கள் அத்தியாவசிய காரணத்திற்காக தான் இந்தியாவிற்கு வந்திருக்கின்றனர்.
எனவே ஹரி, கனடா மக்களின் பாதுகாப்பிற்காகவே விமானங்கள் தடை செய்யப்பட்டிருக்கிறது என்பது எனக்கு தெரிந்தாலும், எங்களை இந்த நிலையிலிருந்து யார் பாதுகாப்பார்கள் என்று கேட்கிறார்.