பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த திங்கட்கிழமை முதல் பிரித்தானியாவில் பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்த இருப்பதாக அறிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் மே-17 முதல் தளர்த்தப்பட்டுள்ளன. அதன்படி 30 பேர் வரை ஒரு குழுவாக வெளியிடங்களில் சந்தித்துக் கொள்ளலாம், 6 பேர் அல்லது இரு குடும்பத்தினர் வீடுகளுக்குள் சந்தித்துக் கொள்ளலாம் என பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசின் ஆலோசனைக் குழுவை சேர்ந்த அறிவியலாளர்கள் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவித்தால் மூன்றாவது கொரோனா அலை பரவல் உருவாகும் அபாயம் உள்ளது என்று எச்சரித்துள்ளனர்.
அதே சமயத்தில் கொரோனா முதல், இரண்டு அலைகளை போல இந்த மூன்றாவது அலை மோசமானதாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் வெதுவெதுப்பான பருவநிலை மற்றும் தடுப்பூசி திட்டம் ஆகியவை எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமைந்துள்ளதால் கொரோனாவை கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும், கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைவாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.