Categories
மாநில செய்திகள்

விடுமுறை கிடையாது… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!

கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன்கள் ஞாயிற்றுக்கிழமையும் வினியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில் முதலமைச்சராக பொறுப்பேற்ற முகஸ்டாலின் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக முதலில் 2000 ரூபாயை அறிவித்திருந்தார். அதற்கான டோக்கன்களும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வரும் 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை கிடையாது என்றும், அன்றைய தினமும் மக்களுக்கு டோக்கன்கள் வினியோகம் செய்யப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |