Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உடல் நலம் சரியில்லாததால் இறந்த முதியவர்…. உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு…. பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினர்….!!

முதியவரின் உடலை அடக்கம் செய்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் பகுதியில் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் 70 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துவிட்டார். இதனால் அவரது உடலை அடக்கம் செய்யும் பணியில் அரசு அனுமதித்ததை விட அதிகமான உறவினர்கள் கூடியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் அங்கு சென்று முதியவரின் உடலை விரைந்து அடக்கம் செய்து விட்டு செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அந்த முதியவர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்து விட்டார் என்ற வதந்தி பரவியதால் அப்பகுதியில் உள்ள மயானத்தில் அவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் முதியவரின் உடலை அடக்கம் செய்வதற்காக மேல் கூடலூரில் இருக்கும் ஒரு வழிபாட்டு தளத்திற்கு சொந்தமான மயானத்திற்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கும் முதியவரின் உடலை அடக்கம் செய்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து இரவு 9 மணி அளவில் அந்த முதியவரின் உடலை கூடலூரில் ஏற்பாடு செய்யப்பட்ட மனத்திலேயே அடக்கம் செய்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது இயற்கையாக மரணித்தவர்களை கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |