ஐசிசி சார்பில் மாதம்தோறும் சிறந்த வீரர் ,வீராங்கனைகளை தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் ,வீராங்கனைகள் பட்டியலை சில தினங்களுக்கு முன் ஐசிசி வெளியிட்டது. இந்த விருதானது ஐசிசி வாக்கு அகாடமி மற்றும் ரசிகர்கள் சார்பில் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவ்வாறு கடந்த ஏப்ரல் மாதம் சிறந்த வீரருக்கான விருது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனும் ,ஒருநாள் போட்டியில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் ‘நம்பர் 1’ இடத்தில் உள்ள பாபர் அசாம் இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுபோல சிறந்த வீராங்கனைக்கான விருதிற்கு , ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் உள்ள அலிசா ஹீலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் , இவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் .