Categories
சினிமா தமிழ் சினிமா

ரம்ஜானுக்கு வெளியாக இருந்த ‘மாநாடு’ முதல் பாடல்…. தயாரிப்பாளர் திடீர் அறிவிப்பு..!!!!

‘மாநாடு’ திரைப்படத்தின் முதல் பாடல் ரம்ஜானுக்கு வெளியாகாது என்று தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் முன்னணி நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ‘மாநாடு’. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பிரபல நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.மேலும் பிரேம் ஜி, எஸ் ஜே சூர்யா, டேனியல் போப், கருணாகரன், மனோஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மே 14ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

ஆனால் வெங்கட்பிரபுவின் தாயார் நேற்று முன்தினம் உயிரிழந்ததால் மாநாடு திரைப்படத்தின் முதல் பாடல் ரம்ஜான் பண்டிகை அன்று வெளியாகாது என்று இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். மேலும் கூடிய விரைவில் மாநாடு திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |