முன்னணி நடிகை நயன்தாராவின் புதிய படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்திலும், விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் இவர் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி வெளியான நிழல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
ஆனால் கொரோனாவின் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் இரண்டு வாரங்கள் மட்டுமே நிழல் திரைப்படம் திரையரங்களில் ஒளிபரப்பப்பட்டது. இதை தொடர்ந்து இப்படக்குழு நிழல் திரைபடத்தை ஓடிடி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி வருகின்ற மே 11 ஆம் தேதி நிழல் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.