மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட டெண்டர் நடைமுறை தொடங்க பட்டிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக கடன் ஒப்பந்தம் மற்றும் கட்டுமான பணிகள் குறித்த கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி இந்தியா மற்றும் ஜப்பான் அரசுகளிடையே 1,536 கோடியே 96 லட்சம் ரூபாய் கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. டெண்டர் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.