தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று திமுக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி ஆளுநர் பதவி ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற உள்ளது. இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் பதவி ஏற்க உள்ளனர்.
அவர்கள் பதவியை ஏற்றுக் கொள்வதற்கு வசதியாக தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ள சபாநாயகராக பிச்சாண்டியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார். இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் அனைவரும் பங்கேற்க உள்ளனர். இதனைத் தொடர்ந்தே நாளை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் கூடுகிறது.