தமிழகத்தில் உள்ள 12 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஒருநாள் சம்பளத்தை கொரோனா தடுப்பு பணிக்காக தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் எடுத்து வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியே வரவேண்டும் என்று எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காக தமிழகத்திலுள்ள 12 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை வழங்கவுள்ளதாக ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஆக்சிஜன் தடுப்பு மருந்து உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ரூ.150 கோடி நிதி உதவி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு நாள் ஊதியம் அவர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.