கொரோனா தடுப்பூசி திட்டத்தில் நீதிமன்றம் தலையிட கூடாது என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க கொரோனா தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி திட்டம் குறித்தும் விலை நிர்ணயம் குறித்தும் இன்று உச்ச நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இதற்கு பதிலளித்த மத்திய அரசு தடுப்பூசி திட்டத்தில் நீதிமன்றம் தலையிட கூடாது என தெரிவித்துள்ளது.
இதனையடுத்து தடுப்பூசி விலை மற்றும் நோய் கட்டுப்பட்டு திட்டங்கள் அனைத்தும் மருத்துவ குழுவினர்களுடனும், அறிவியல் பூர்வமான கருத்துக்களை கொண்டும் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். இதில் நீதிமன்றம் தலையிட்டால் தேவையில்லாத பின்விளைவுகள் உண்டாகும் எனவும், இது நீதிமன்றத்திற்கு தேவையில்லாதது எனவும் கூறியுள்ளனர்.