தொப்பையை குறைக்கும் சுவையான இஞ்சி தேன் டீ செய்யலாம் வாங்க ..
தேவையான பொருட்கள் :
டீத்தூள் – 2 ஸ்பூன்
தேன் – விருப்பத்திற்கு ஏற்ப
பட்டை – சிறிய துண்டு
இஞ்சி – சிறிய துண்டு
புதினா இலை – சிறிதளவு
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையானஅளவு தண்ணீர் விட்டு , பட்டையை போட்டு கொதிக்க விட வேண்டும்.பின் அதில் இஞ்சி , டீத்தூள் மற்றும் புதினாவை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பின் இதனை வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும் . இதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, பருகினால் சுவையான இஞ்சி தேன் டீ தயார்!!!