செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கின் போது மதுபிரியர்கள் மது அருந்துவதற்காக மது பாட்டில்களை வாங்க கடையில் குவிந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் வருகிற 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாட்களில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் மது பிரியர்கள் குடிப்பதற்காக மதுபாட்டில்களை வாங்க பல்வேறு இடங்களிலிருந்து திரண்டு வந்துள்ளனர். இந்நில்லையில் மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள அயல்நாட்டு மதுக்கடையில் கூட்டம் நிரம்பி வழிந்ததுள்ளது.
இதனையடுத்து மது வாங்க வந்தவர்களை டாஸ்மாக் பணியாளர்கள் வரிசையில் நிற்க வைத்து கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கியுள்ளனர். மேலும் முக கவசம் அணிந்தவர்கள் மட்டும் 5, 5 பேராக கடைக்கு சென்று மது வாங்க அனுமதித்துள்ளனர். இதனையடுத்து மாமல்லபுரம் காவல் துறையினர் சமூகம் இடைவெளிகளை கடை பிடித்து வரிசையில் நின்று மது வாங்கி செல்ல மது பிரியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.