Categories
தேசிய செய்திகள்

எல்லாத்தையும் வெளிப்படையா சொல்லுங்க… மத்திய அரசின் மீது குற்றசாட்டு… ராகுல்காந்தியின் ட்விட்டர் பதிவு…!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் சரியான முறையை மத்திய அரசு கையாளவில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா தொற்றின் 2ஆம் அலையை மத்திய அரசு சரியான முறையில் கையாளவில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து மத்திய அரசு தனது பணிகளை சரியாய் முறையில் மேற்கொள்ளவில்லை என்றும், அதனால் தன இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வெளிநாடுகளிடம் இருந்து பல உதவிகளை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி தற்பெருமை பேசி வருகிறார் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் வெளிநாடுகளிடம் இருந்து இந்தியா பெற்ற உதவிகளை மத்திய அரசு வெளிப்படையாக அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Categories

Tech |