பிரபல நடிகை அபிராமி சீரியல் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.
மலையாளத் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை அபிராமி தமிழ் சினிமாவில் அர்ஜுன் நடிப்பில் வெளியான வானவில் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து தமிழிழும் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை அபிராமி கடந்த சில ஆண்டுகளாக திரையுலகை விட்டு விலகி இருந்தார்.
அதன் பிறகு நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்நிலையில் நடிகை அபிராமி மீண்டும் மலையாளத்தில் உருவாக இருக்கும் சீரியலில் நடிக்கிறார். ஆகையால் ரசிகர்கள் பலரும் நடிகை அபிராமியின் ரீ என்ட்ரியை வரவேற்று வருகின்றனர்.
സൂര്യ ടിവിയുടെ പുതിയ പരമ്പരയിലൂടെ ജനപ്രിയ താരം അഭിരാമി വീണ്ടും നിങ്ങളുടെ മുന്നിലേക്ക് എത്തുന്നു.
KANAKANMANI | COMING SOON #SuryaTV #Kanakanmani #SerialsOnSuryaTV #KanakanmaniOnSuryaTV #MalayalamSerialsOnSuryaTV #Abhirami pic.twitter.com/SbHbKThFhS
— Surya TV (@SuryaTV) April 21, 2021