Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இவர்களுக்கு விடுமுறை கிடையாது – அதிரடி உத்தரவு…!!!

தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் பதிவேற்றதையடுத்து தனது நல்லாட்சி பணியை சிறப்பாக தொடங்கினார். இந்நிலையில் தமிழக மக்கள் கொரோனாவால் கடுமையான நிதி நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளனர். எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4000 வழங்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். இதன் முதற்கட்டமாக இம்மாத இறுதிக்குள் ரூபாய் 2000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இதன் முதல் தவணையாக ரூ.2000  இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்ததையடுத்து இன்று முதல் ரூ.2000 வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நிவாரணத்தொகை வழங்கும் பணி இன்று முதல் தொடங்குவதால் அவசியமின்றி விடுப்பு எடுக்கக் கூடாது என்று ரேஷன் ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்படி அதிகாரிகளிடம் தெரிவித்து விடுப்பு பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர். முழு ஊரடங்கால் இன்று முதல் ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும்.

Categories

Tech |