Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா பாதிப்பு…. சன் டிவி நிறுவனம் 30 கோடி நன்கொடை…. குவியும் பாராட்டுக்கள்…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சன் டிவி நிறுவனம் 30 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதில் திரை பிரபலங்கள் பலரும், அரசியல் பிரமுகர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முடித்த நன்கொடைகளை வழங்கி உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 30கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளது.

இதுகுறித்து சன் டிவி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, கோவிட்-19 தொற்றுநோயின் இரண்டாவது அலைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க சன்டிவி ரூபாய் 30 கோடி நன்கொடை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. சன் டிவியின் இந்த நற்செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |