வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கர்ட்லி அம்ப்ரோஸ்,இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை பற்றி பேசியுள்ளார் .
கர்ட்லி அம்ப்ரோஸ்,யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில்,இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவை பற்றி கூறும்போது ,இந்திய அணியில் தற்போது சிறந்த வேகப்பந்து வீச்சாளராக பும்ரா திகழ்ந்து வருகிறார் என்றும்,அவருக்கு நான் மிகப்பெரிய ரசிகன் என்று அவர் தெரிவித்துள்ளார். மற்ற பந்துவீச்சாளர்களை காட்டிலும், பும்ராவின் பந்து வீச்சு வித்தியாசமாக இருப்பதாக கூறினார் . அவருடைய சிறப்பான பந்துவீச்சை பார்ப்பதற்காக, ஆவலுடன் இருப்பதாக கூறினார். அதோடு டெஸ்ட் போட்டிகளில் நிச்சயமாக 400 விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என்றும் அவர் கூறியுள்ளார் .பும்ரா பந்தை நல்ல முறையில், ஸ்விங் செய்கிறார். அதோடு யார்க்கர் பந்துகளையும் வீசுகிறார் என்று கூறினார். அவரிடம் நிறைய பந்துவீச்சீல், நிறையஅஸ்திரங்களை வைத்திருப்பதாகவும், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் விளையாடுவதற்கான, அனைத்து உடல் தகுதியுடன் அவர் இருக்க வேண்டும்.
இவ்வாறு நீண்ட காலம் நல்ல உடல் தகுதியுடன், இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக பும்ரா 400 விக்கெட் என்ற மைல்கல்லை எளிதாக எட்ட முடியும் என்று அவர் கூறியுள்ளார். இதை தொடர்ந்து அடுத்த மாதம் நடைபெறவிருக்கும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமென்றால், தொடக்க பேட்ஸ்மேன்கள், தொடக்கத்திலிருந்தே வலுவான அடித்தளம் அமைத்துத் தரவேண்டும். ஆனால் தொடக்கத்திலேயே விக்கெட்டுகள் வீழ்ந்தால் , மிடில் பேட்ஸ்மேன்களுக்கு அது நெருக்கடியாக மாறிவிடும். நல்ல தொடக்கம் அமைந்தால் மட்டுமே, மிடில் பேட்ஸ்மென்கள் நெருக்கடி இல்லாமல் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். அப்போதுதான் அணியில் அதிக ஸ்கோரை குவிக்க முடியும் என்று ,அம்ப்ரோஸ் கூறியுள்ளார்.