கனடாவில் சடலம் ஒன்று நிலத்தில் கண்டெடுக்கப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்மேற்கு மணிடோபாவின் கிராமப்புற நகராட்சியான சோரிஸ்-க்ளென்வுடில் என்ற பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு ஒருவர் தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றினர். ஆனால் உயிரிழந்தவருடைய வயது, பாலினம் மற்றும் அவரை பற்றிய ஏனைய விவரங்கள் குறித்து இன்னும் காவல்துறையினர் தகவல் வெளியிடவில்லை.
மேலும் சடலமாக கிடந்தவருடைய மரணத்தில் சந்தேகம் எதுவும் உள்ளதா என்ற தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் காவல்துறையினருடன் சேர்ந்து மருத்துவ பரிசோதகர், தடவியல் நிபுணர்கள் ஆகியோரும் அந்த சடலம் குறித்து விசாரித்து வரும் நிலையில் இறந்தவர் பற்றிய தகவல்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.