Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பணியில் இருக்கும்போது இறப்பு… உதவிய சக காவல்துறையினர்… அமைப்பின் மூலம் திரட்டிய பணம்..!!

விபத்தில் உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பத்தினருக்கு ரூபாய் 5 லட்சத்து 11 ஆயிரம் பணத்தை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் வழங்கியுள்ளார்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 1993-ஆம் ஆண்டு காவல்துறையினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜெயம்கொண்டான் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பணியில் இருக்கும்போதே ஒரு விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இந்நிலையில் ராதாகிருஷ்ணனுடன் பணிபுரிந்து வந்த சக காவல்துறையினர் ஒன்றிணைந்து காக்கும் கரங்கள் அமைப்பின் மூலம் ரூபாய் 5 லட்சத்து 11 ஆயிரம் பணம் வசூலித்தனர். இதனையடுத்து வசூல் செய்த பணத்தை விபத்தில் உயிரிழந்த ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் முன்னிலையில் அவரது குடும்பத்தினரிடம் வழங்கி உள்ளார்கள்.

Categories

Tech |