உத்திரபிரதேசத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் கூடுதலாக 7 நாட்கள் என மே 17 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று உச்சத்தை அடைந்து உள்ள நிலையில் தினசரி தொற்று பாதிப்பும் அதிகரித்து வருகிறது. ஒரு நாள் பாதிப்பு 4 லட்சத்தை கடந்து வருகிறது. இதனால் ஊரடங்கு அமல்படுத்துவதே இதற்கு தீர்வு என பல மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களில் ஒன்றாக உத்திரபிரதேசம் இருந்து வருகிறது. அங்கு 2.45,000 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து உயிரிபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து உத்திரபிரதேசத்தில்ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாளை முடிவடையக்கூடிய நிலையில் இன்னும் 7 நாட்களுக்கு ஊரடங்கு தொடரும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.