திடீரென பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பைத்தந்துறை கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பச்சையம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பச்சையம்மாள் தனது வீட்டில் இருந்த விஷத்தை எடுத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அடுத்து மயங்கிய நிலையில் இருந்த பச்சையம்மாளை அருகில் உள்ளர்வர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கபட்ட சிகிச்சை பலனின்றி பச்சையம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் பச்சையம்மாள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.